sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அண்ணாமலை

/

சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அண்ணாமலை

சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அண்ணாமலை

சட்டசபை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அண்ணாமலை

15


UPDATED : ஜன 30, 2025 06:27 PM

ADDED : ஜன 30, 2025 06:00 PM

Google News

UPDATED : ஜன 30, 2025 06:27 PM ADDED : ஜன 30, 2025 06:00 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''சட்டசபையில் தீர்மானம் போட்டதால், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை,'' என்று வல்லாளப்பட்டியில் நடந்த பாராட்டு விழாவில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

Image 1375332


டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு வந்த அவருக்கும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கும் ஊர் மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

Image 1375333


மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியது. இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை நேரில் சந்தித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசுடன் பேசி சுரங்கத்திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார்.

Image 1375334


அதன்படி உள்ளூர் விவசாயிகள், கிராம மக்கள் பிரதிநிதிகள் டில்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அவரும் திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி திட்டம் ரத்து செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்று அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதையடுத்து மதுரை அழகர்கோவில் வல்லாளப்பட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை ஆகியோருக்கு ஊர் மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

Image 1375337


விழாவில் பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ''இந்த நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஊர் மக்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ''ஒரு பிரச்னை என்றால் எப்படி அணுக வேண்டும் என்று அனைவருக்கும் இந்த ஊர் மக்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு அனைவருக்கும் நன்றி. பிரதமர் மோடியின் துாதுவராக கிஷன் ரெட்டி இங்கு வந்திருக்கிறார்.

ஸ்டாலினுக்கு பதில் சொல்லாமல் போய் விட்டால் நான் தவறு செய்து விட்டதாக அர்த்தமாகி விடும்.

''தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை. சட்டசபையில் வாராவாரம் தீர்மானம் போடுகிறீர்கள். அது எல்லாம் நடக்கிறதா? மாநில அரசு மிரட்டலுக்கு எல்லாம் மோடி பயந்தவர் இல்லை. உக்ரைன்- ரஷ்யாவில் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் மோடி, மாநில அரசுக்கு பயப்படுகிறாரா? ''இந்த ஊர் மக்கள் அன்புக்கு மட்டும் தான் மோடி இதை செய்துள்ளார். 11 ஆயிரம் பேர் மீது வழக்கு போட்ட வேலையை தான் மாநில அரசு செய்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,'' என்றார்.






      Dinamalar
      Follow us