தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணிகளால் அவதி

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணிகளால் அவதி

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணிகளால் அவதி

1


UPDATED : அக் 14, 2026 07:05 PM

ADDED : அக் 14, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:05 PM ADDED : அக் 14, 2026 05:58 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பஸ்டாண்ட் பகுதியில் நடந்து வரும் சாலை பணிகளால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை பழைய பஸ்டாண்ட் முதல், டி.வி.எஸ்., கார்னர் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் காரணமாக ஏற்கனவே இருந்த சாலைகளில் கனரக இயந்திரங்கள் சாலை பணிகளுக்காக சென்று வருவதால், சாலைகளில் தார் இருந்த இடம் தெரியாமல் வரிவரியாக கோடுகள் தோற்றமளிக்கின்றன.

இதில் டூ - வீலர்கள், கார்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து செல்லும் பெற்றோர் தினமும் விபத்துகளை சந்தித்து கொண்டிருக்கின்றனர். இந்த சாலைகளின் வழியாக தான் கலெக்டர், எஸ்.பி., நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்று வருகின்றனர்.

மழைக்காலம் நெருங்கும் வேளையில், சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us