தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பாலியல் வழக்கில் சிக்கிய ‘டிவி’ பிரபலம் தலைமறைவு

பாலியல் வழக்கில் சிக்கிய ‘டிவி’ பிரபலம் தலைமறைவு

பாலியல் வழக்கில் சிக்கிய ‘டிவி’ பிரபலம் தலைமறைவு


UPDATED : நவ 23, 2026 07:04 PM

ADDED : நவ 23, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:04 PM ADDED : நவ 23, 2026 07:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்ட வழக்கில் தேடப்பட்டு வரும், ‘பிக்பாக்ஸ்’ பிரபலம் முத்துகுமரன் தலைமறைவாகியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 29. இவர், தனியார் ‘டிவி சேனல்’ ஒன்றில் ஒளிபரப்பாகும், ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பிரபலமானார்.

தற்போது, சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் முத்துகுமரன், தன்னுடன் நட்பாக பழகிய, 31 வயது பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவரை நம்ப வைத்து, பாலியல் உறவு கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, அப்பெண், ‘இன்ஸ்டாகிராம்’ எனும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு, முத்துகுமரன் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து கூறினார்; தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அப்பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், ‘தாலி கட்டி, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த முத்துகுமரன், நயவஞ்சகமாக நம்ப வைத்து என்னுடன் பல முறை உறவு கொண்டார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.

இப்புகார் மனு, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணைக்கு பின், முத்துகுமரன் மீது, பெண்ணை ஏமாற்றும் நோக்கத்துடன், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, அவருடன் பாலியல் உறவு கொண்டது தொடர்பாக, ‘பி.என்.எஸ்., 69’ என்ற சட்டப்பிரின் கீழ், முத்துக்குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் முத்துகுமரன் தலைமறைவாகி உள்ளார். அவர், மொபைல் போன் ‘சுவிட் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. வீடும் பூட்டி கிடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us