ADDED : நவ 15, 2026 07:32 PM
த.வெ.க., ஆட்சிக்கு வந்தது, தமிழகத்திற்கு கரும்புள்ளி விழுந்து விட்டது. எல்லைச்சாமியாக இருந்து விஜய் காப்பார் என எதிர்பார்த்த மக்கள், ஏமாந்துவிட்டனர். குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை; பாலியல் வன்கொடுமைகள் பெருகி விட்டன. சட்டம் – ஒழுங்கு சீர்கேடால், த.வெ.க., கூட்டணியில் இருந்து கம்யூ., கட்சிகள் விலகும் முடிவில் உள்ளனர். தமிழக மக்கள், அ.தி.மு.க., – தி.மு.க.,வை நினைத்து பார்க்கின்றனர்.
எந்த பிரச்னை குறித்தும், முதல்வர் விஜய் பேசுவதில்லை. ஜோதிடர் சொன்னால் தான் பேசுவாரா?
பெண் கலெக்டருக்கு தவறான 'மெசேஜ்' அனுப்பிய எம்.எல்.ஏ.,வை, சினிமா பாணியில் விஜய் கண்டிப்பார் என பார்த்தால், பரிசளித்து, தட்டிக் கொடுத்துள்ளார். த.வெ.க.,வில் 30 எல்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானம் செய்யவே, முதல்வர் அழைத்து பேசியுள்ளார். விரைவில் இந்த ஆட்சி கலையும்.
– செல்லுார் ராஜூ
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
