தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/த.வெ.க., – தி.மு.க., அணிகள் மோதல்

த.வெ.க., – தி.மு.க., அணிகள் மோதல்

த.வெ.க., – தி.மு.க., அணிகள் மோதல்


ADDED : நவ 26, 2026 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கவர்னரிடம் உதயநிதி மனு செய்திக்கான பாக்ஸ்

‘கவர்னர் காலில் விழ தயாராகி விட்டனர்’

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, கவர்னர் அர்லேக்கரிடம் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேரில் மனு அளித்தார். இதை கிண்டலடித்துள்ள த.வெ.க., சமூக வலைதள அணி வெளியிட்டுள்ள பதிவு:

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் எதற்கு என கேட்ட, அண்ணாதுரையின் தி.மு.க.,வை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, கொள்கைக் குன்றுகள் என, மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்சவாடல் என்பதை, கவர்னர் அர்லேக்கர் சந்திப்பின் வாயிலாக, தி.மு.க., நிரூபித்துள்ளது.

ஆட்சியில் இருந்த வரை, கவர்னரை பேச விடாமல் செய்து விட்டோம் என, கொக்கதரித்து விட்டு, இப்போது, 'ஆபத்பாந்தவனே' என, கவர்னரின் காலில் விழவும் தயாராகி விட்டனர். கருணாநிதி ஆசி பெற்ற சின்னம் தாமரை என்ற வரலாறு, மீண்டும் அரங்கேறப் போகிறது.

முரசொலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனின் பேட்டி இடம் பெற்றுள்ளது, இதை உறுதி செய்கிறது. அன்று போலவே, பா.ஜ.,வை தமிழகத்தில் வளர்க்கும் பணியை, தி.மு.க., தலைமை ஏற்று நடத்த இருக்கிறது. தி.மு.க., ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

‘எந்த அருகதையும் கிடையாது’

த.வெ.க.,வுக்கு பதிலடி தரும் வகையில் தி.மு.க., – ஐ.டி., அணி அறிக்கை:

கவர்னர் மாளிகையின் தயவுக்காக காத்துக் கிடந்த சோபா மாடல் ஆளுங்கட்சிக்கு, தி.மு.க.,வை பற்றி பேச அருகதை இருக்கிறதா? டில்லிக்கும், கவர்னருக்கும் நடுநடுங்கி மத்திய, மாநில உறவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி குழுவை கலைத்த த.வெ.க.,வுக்கு தி.மு.க., பற்றிப் பேச, எந்த அருகதையும் கிடையாது. கவர்னர் என்ற பதவி கூடாது என்பதே என்றும், எங்கள் நிலைப்பாடு.

ஆனால், கவர்னர் பதவி இருக்கும் வரை, அதற்கு உண்டான மரியாதையை, அண்ணாதுரை காலம் முதல் தி.மு.க., எப்போதும் வழங்கியே இருக்கிறது. அதுதான் ஜனநாயகத்தின் மரபு. விக்கிரவாண்டி மாநாட்டில், கவர்னர் பதவி தேவையில்லை என, சொல்லி விட்டு, அதே கவர்னரிடம் மனு அளிக்க ராஜ்பவன் சென்ற சோப்ளாங்கி யார் தெரியுமா?

பெண்களுக்கு அண்ணனாகவும், தாய்மாமானாகவும் இருப்பேன் என, சொல்லி விட்டு, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை காப்பாற்றுவது யார்?

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us