sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

/

தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

123


UPDATED : பிப் 28, 2026 05:51 AM

ADDED : பிப் 27, 2026 04:51 PM

Google News

123

UPDATED : பிப் 28, 2026 05:51 AM ADDED : பிப் 27, 2026 04:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து கரம் பிடித்தார். நிச்சயதார்த்தம் லண்டனிலும் , திருமணம் 1999ம் ஆண்டுஆக., 25 ல் சென்னையில் நடைபெற்றது.

இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணம் முடிந்து 27 ஆண்டுகள் கழிந்த நிலையில் சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக சங்கீதா தனது மனுவில் கூறியுள்ளார்.

பிப்.,24ம் தேதியே இந்த வழக்கை சங்கீதா செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தற்போது, இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சங்கீதா தொடர்ந்த இந்த வழக்கில் ஏப்.,20 ல் நேரில் ஆஜராக வேண்டும் என விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கட்சியின் தலைவராக தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நடிகர் விஜய்க்கு, இந்த விவகாரம் பெண் வாக்காளர்கள் மத்தியில் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜீவனாம்சம் வழங்க வேண்டும்!

சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் திருமண வாழ்வு எப்போதோ முடிந்து விட்டது. ஆவணங்களில் மட்டுமே கணவன் மனைவியாக இருக்கிறோம். விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பிய பிறகும், சுமுகமாக பிரிவதற்கான 2 முறை முயற்சி எடுத்தேன். பொது வெளியில் விஜய்க்கு அவமானம் ஏற்படக்கூடாது என்பதால் இந்த முயற்சிகளை எடுத்தேன்.
கடந்த நவ.,9ம் தேதி வரை, சுமுகமாக பிரிய முயற்சிகள் எடுத்தேன். அந்த முயற்சிகளை விஜய் பொருட்படுத்தாததால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. விஜய்யின் திருமணம் கடந்த உறவால் எனக்கு அவமானம் ஏற்படுகிறது. விஜய்யுடன் வெளிநாடுகளில் சுற்றும் அந்த நடிகை, அவருடன் இருக்கும் படங்களை தொடர்ந்து வெளியிட்டார். இதனால் எனக்கு பொதுவெளியில் பெரும் அவமானம் ஏற்பட்டது.
அவருடன் தொடர்புடைய நடிகையை வழக்கில் குறிப்பிடவில்லை. தேவை ஏற்பட்டால், நடிகையை இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிட்டு வழக்கு தொடர்வேன். சென்சிடிவ் ஆன இந்த வழக்கை நீதிமன்றத்தில் விசாரித்தால் சங்கடம் நேரிடும்; நீதிபதியின் அறையில் விசாரிக்க வேண்டும். விஜய்யின் வருமானம், சமூக அந்தஸ்துக்கு ஏற்ற ஜீவனாம்சம் நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us