sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்கள் பிரச்னைகளில் களம் இறங்கணும்; கட்சியினருக்கு விஜய் அட்வைஸ்!

/

மக்கள் பிரச்னைகளில் களம் இறங்கணும்; கட்சியினருக்கு விஜய் அட்வைஸ்!

மக்கள் பிரச்னைகளில் களம் இறங்கணும்; கட்சியினருக்கு விஜய் அட்வைஸ்!

மக்கள் பிரச்னைகளில் களம் இறங்கணும்; கட்சியினருக்கு விஜய் அட்வைஸ்!

10


ADDED : ஜன 31, 2025 05:51 PM

Google News

ADDED : ஜன 31, 2025 05:51 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''களத்திற்கு கட்சி நிர்வாகிகள் செல்ல தயங்கக்கூடாது,'' என்று த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் கூறி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மாவட்டச் செயலாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (ஜன.31) பனையூர் அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் 19 மாவட்ட நிர்வாகிகள் கொண்ட பட்டியலை நடிகர் விஜய் வெளியிட்டார். பின்னர் நிர்வாகிகள் மத்தியிலான ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசினார். இதுகுறித்து நிர்வாகிகள் கூறிய விவரங்கள் வருமாறு;

உங்களின் உழைப்பில் தான் கட்சியின் வளர்ச்சியே இருக்கிறது. நானும் உழைக்கிறேன், நீங்களும் உழையுங்கள். வெற்றி அடைவோம். களத்திற்குச் செல்ல யாரும் தயங்கக்கூடாது. மக்கள் பிரச்னைகளில் தீவிரமாக இயங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

அதே நேரத்தில் விஜய் எக்ஸ் வலைதள பக்கத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதில் இன்று(ஜன.31) கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோருக்கு என்ன பொறுப்பு என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தமது பதிவில் கூறி இருப்பதாவது;

தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் விஜய் கூறி உள்ளார்.

த.வெ.க., புதிய பொறுப்பாளர்கள் விவரம்;

ஆதவ் அர்ஜூனா - தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர்

சி.டி.ஆர். நிர்மல்குமார்- துணை பொதுச்செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு

ஜெகதீஷ் - தலைமைக்கழக இணை பொருளாளர்

ராஜ்மோகன் - கொள்கைப் பரப்புச் செயலாளர்

லயோலா மணி (எ) மணிகண்டன் - கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

சம்பத்குமார் - கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

கேத்ரின் பாண்டியன் - கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்

வீரவிக்னேஷ்வரன் - செய்தித் தொடர்பாளர்

ரமேஷ் - இணை செய்தித் தொடர்பாளர்

ஜெயபிரகாஷ் - தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்

குருசரண் - தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

ரஞ்சன்குமார் - தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

குருமூர்த்தி - சமூக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்

ராம்குமார் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

வெங்கடேஷ் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

நிரேஷ்குமார் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

அறிவானந்தம் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

விஷ்ணு - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

ப்ளோரியா இமாக்குலேட் - சமூக ஊடகப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதல்படி கட்சி பணிகளை மேற்கொள்வார்கள்.

கட்சித் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகளும், புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள ஆதவ் அர்ஜூனா, அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களை பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அந்த பதிவில் விஜய் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us