ADDED : மார் 30, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் பெயர் மாற்றுவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், 'பெயர் மாற்றப்படாது' என, மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் டி.வி.எஸ்., டோல்கேட், 'கலைஞர் கருணாநிதி டோல்கேட்' என்று பெயர் மாற்றம் செய்வதாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெயர் மாற்றத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்த இடம் தொன்று தொட்டு டி.வி.எஸ்., டோல்கேட் என்று அழைக்கப்படுவதால், தற்போதுள்ள பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.