தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'யு - டியூப்'பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது

'யு - டியூப்'பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது

'யு - டியூப்'பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது


ADDED : டிச 05, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'யு - டியூப்'பில் வீடியோக்களை பார்த்து, மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர், வி.எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகுந்தலா, 64. கடந்த 30ம் தேதி, மருந்தகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்து இருந்த, 3 சவரன் செயினை பறித்து தப்பினர்.

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், மதுரையைச் சேர்ந்த முகமது ஷேக் சிக்கந்தர், 24, திண்டுக்கல்லைச் சேர்ந்த பர்வேஸ் முஷ்ரப், 23, ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், 'யு - டியூப்'பில் வீடியோக்களை பார்த்து, முதல் முதலாக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து, 19 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us