உள்ளடக்கத்திற்கு செல்ல

இரு தொகுதி இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
இரு தொகுதி இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : செப் 15, 2026 05:37 PM

அ நிறம் | அளவு
சென்னை: தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்.,6ம் தேதி நடைபெற உள்ளது. தவெக, திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தன.
இந்நிலையில், அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணனும் மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தியும் போட்டியிடுவார்கள் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
