தமிழுக்கு இரு பாடவேளை நேரம்: பல்கலையின் உத்தரவுக்கு கண்டனம்
தமிழுக்கு இரு பாடவேளை நேரம்: பல்கலையின் உத்தரவுக்கு கண்டனம்
UPDATED : ஜூலை 22, 2025 06:20 AM
ADDED : ஜூலை 21, 2025 10:46 PM

கோவை; தமிழ் மொழிக்கு இரு பாடவேளை ஒதுக்கி, அதை பின்பற்ற அறிவுறுத்தியுள்ள பாரதியார் பல்கலைக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில், 2022 - 23ம் கல்வியாண்டில் பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கு தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
பிற பாடங்களுக்கு, 6 மணி நேரமாக பாடவேளை ஒதுக்கப்பட்டது.
ஒரே பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க, துறைகளுக்கு வெவ்வேறு பாடவேளை நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து துறைகளுக்கும் தமிழ் பாடவேளை, 4 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக, தமிழ் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
பல்கலை நிர்வாகம் இதை சரிசெய்யும் விதமாக, பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கல்லுாரிகளும், தமிழ்மொழி பாடத்துக்கு ஆறு மணி நேர பாடவேளை என்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி பல்கலையில், பாடத்திட்ட நிலைக்குழுக் கூட்டம் நடந்தது. பாடத்திட்டக்குழுக்கள் இறுதி செய்த தீர்மானங்கள், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சில துறைகள் மட்டும் அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும், பல்கலையின் விதிகளுக்கு முரணாகவும், தமிழ் பாடவேளை நேரத்தை நான்கு மணி நேரமாக குறைத்து வழங்கியிருந்தன.
இதற்கு தமிழ் பாடத்திட்டக்குழுவின் சார்பாக, கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அத்துறை சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை, நிராகரிக்க வலியுறுத்தப்பட்டது.
ஆனால், பல்கலை நிர்வாகம் இதைக்கருத்தில் கொள்ளாமல், அரசின் உத்தரவுக்கு எதிராக பி.காம்., மற்றும் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு, தமிழ் பாடவேளையை குறைத்து பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. இது தமிழ் பேராசிரியர்கள் இடையே, அதிருப்தியை ஏற்படுத்தியு ள்ளது.
பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'பல்கலையி ல், துணைவேந்தர் இல்லாததால் பல்வேறு குளறுபடிகள் நடக் கின்றன. இரு துறைகளுக்கு மட்டும் தமிழ் பாடவே ளையை குறைத் துள்ளது கண்டனத்துக்குரியது. இதை பிற துறை களும் கையில் எடுத்து, பாடவேளையை குறைக்க முற்படுவர். அரசி ன் உத்தரவை காற்றில் பறக்க விட்டு, இதுபோன்று உத்தரவு வழங்கியிருப் பது தவறு' என்றார்.