வெவ்வேறு இடங்களில் விபத்து தொழிலாளி உள்பட இருவர் பலி
வெவ்வேறு இடங்களில் விபத்து தொழிலாளி உள்பட இருவர் பலி
UPDATED : நவ 11, 2026 08:08 PM
ADDED : நவ 11, 2026 06:10 PM
ஓசூர்: வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில், வட மாநில தொழிலாளி உட்பட இருவர் பலியாகினர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுப்ரதா மகாஜி, 37. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 6ம் தேதி இரவு, 11:45 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் மின்வாரிய அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில், டி.வி.எஸ்., ரைடர் பைக்கில் சென்றார். அப்போது, பைக்குடன் கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
ராயக்கோட்டை அடுத்த கொப்பக்கரை அருகே, கோனேரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் அருண்குமார், 40. நேற்று முன்தினம் மதியம், 1:15 மணிக்கு, உத்தனப்பள்ளி - ராயக்கோட்டை சாலையில், மகேந்திரா சைலோ காரை ஓட்டிச்சென்றார். கருக்கனஹள்ளி கிராமம் அருகே சென்ற போது, சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அருண்குமார், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
