இரு கார்கள் நேருக்கு நேர் மோதி சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
இரு கார்கள் நேருக்கு நேர் மோதி சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
ADDED : நவ 28, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: சென்னை, கொளத்துாரை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி ஜான்சி, 30. மகன் பெனின்ராஜ், 14. ஜான்சியின் அக்கா ஏஞ்சல், 34. அவரது மகன் பெனிட்டோ, 8. இவர்கள், காரில் திருச்சுழி அருகே புல்வாய்நாயக்கன்பட்டியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து, மேலையூரில் இருந்து சாயல்குடி வழியாக துாத்துக்குடி சென்றனர். நேற்று இரவு, 8:00 மணிக்கு வளைவு பகுதியில் ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே சிவகாசியை சேர்ந்த கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக இன்ஜினியர் சீனிவாசன், 55, காரில் வந்தார்.
அவரது கார் மீது தாஸ் ஓட்டி வந்த கார் நேருக்குநேர் மோதியதில் ஏஞ்சல், பெனிட்டோ பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

