கடலாடி அருகே ரூ.1,500 லட்சம் வாங்கிய வட்டார சமூக நல அலுவலர் உட்பட இருவர் கைது
கடலாடி அருகே ரூ.1,500 லட்சம் வாங்கிய வட்டார சமூக நல அலுவலர் உட்பட இருவர் கைது
ADDED : ஜன 22, 2024 11:17 PM

ராமநாதபுரம்; கடலாடி அருகே பெண் குழந்தை திட்ட பயனாளியிடம் ரூ.1,500 லட்சம் வாங்கிய வட்டார சமூக நல அலுவலரை லஞ்சம் ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெய தேவி, 31.
இவர் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சேமிப்பு பத்திரம் பெறுவதற்காக
கடலாடி வட்டார சமூக நல அலுவலர் சண்முக ராஜேஸ்வரியை அணுகினார். இதற்காக இவர் ஜெய தேவியிடம் லஞ்சம் கேட்டார். லஞ்சப் பணத்தை சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டீ கடை நடத்தி வரும் கண்ணனிடம் கொடுத்து விடுமாறு, ஜெயதேவியிடம் சண்முக ராஜேஸ்வரி கூறினார். இதனை தொடர்ந்து ஜெயதேவி இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசாரிடம் காலை புகாரளித்தார். இதனை தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.1,500 ஐ ஜெய தேவி, சாயல்குடி கண்ணனிடம் மாலை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கண்ணனை கையும், களவுமாக பிடித்தனர். அவரது ஒப்புதல் வாக்குமூலம் படி, வட்டார சமூக நல அலுவலர் சண்முக ராஜேஸ்வரியிடம், லஞ்சம், ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரித்தனர்.
ஜெயதேவியிடம் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து சண்முகராஜேஸ்வரி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இடைத்தரகராக செயல்பட்ட கண்ணனிடமும் விசாரித்து வருகின்றனர்.