ADDED : ஜூலை 26, 2011 07:20 PM
மேட்டூர்: கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்ட இருவரை கருமலைக்கூடல் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.மேட்டூர், கருமலைக்கூடல், ராமூர்த்தி நகரை சேர்ந்த முனியப்பன் மகன் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார் (25), அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் அருள் (எ) அருண்குமார் (25).
இவர்கள் மீது கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷனில் கொலை, வழிப்பறி உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது.இருவரும் வெளியில் நடமாடினால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவும், அதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கருமலைக்கூடல் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.அதை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.,மயில்வாகனன் பரிந்துரை படி, ரஞ்சித் (எ) ரஞ்சித்குமாரையும், அருள் (எ) அருண்குமாரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.