டூ - வீலர்கள் மோதி விபத்து 2 பேர் பலி; இருவர் சீரியஸ்
டூ - வீலர்கள் மோதி விபத்து 2 பேர் பலி; இருவர் சீரியஸ்
ADDED : ஜன 03, 2025 11:26 PM
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், கடத்துார், பள்ளிக்கூட பிரிவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, 64; டேங்க் ஆப்பரேட்டர். தன் உறவினரான கன்னியாகுமரி, 46, அவரது மகள் சுப்புலட்சுமி, 23, ஆகியோருடன், 'ஹோண்டா யுனிகார்ன்' பைக்கில் கோவையில் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினர்.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்ட எல்லையான நீலிபாளையம் ரைஸ் மில் மேடு அருகே, எதிரே அதிவேகமாக வந்த, 'டியூக்' பைக் கண்ணிமைக்கும் நேரத்தில், ரங்கசாமி ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில், இரு பைக்குகளிலும் வந்த நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்தில் ரங்கசாமி, டியூக் பைக்கை ஓட்டி வந்த நம்பியூரை சேர்ந்த சுரேஷ்குமார், 20, பலியாகினர்.
அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய தாய், மகளை மீட்டு அன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.