ADDED : ஜன 01, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் வீலிங் சாகசம் செய்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இச்சாலையில் உள்ள கோதண்டராமர் கோயில் முதல் முகுந்தராயர் சத்திரம் இடையே இரு இளைஞர்கள் டூவீலரில் அமர்ந்து வீலிங் எனும் முன் மற்றும் பின்பக்க சக்கரத்தை அடுத்தடுத்து அந்தரத்தில் துாக்கி சாகசம் செய்தனர். ஒரு இளைஞர் சுற்றுலா பயணியின் கார் முன் டூவீலரில் 'வீலிங் 'செய்து அச்சத்தை ஏற்படுத்தினர். இதனால் வாகனங்கள் அடுத்தடுத்து சாலையில் நின்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ பரவிய நிலையில் டூவீலரை ஓட்டிய ராமநாதபுரம் அருகே துத்திவலசை சேர்ந்த அஜய்24, என்பவரை தனுஷ்கோடி போலீசார் கைது செய்தனர்.