ADDED : அக் 06, 2024 01:40 AM
கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே பாலுாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 23. இவர் கிராமங்களில் பால் சேகரித்து பண்ணைக்கு அனுப்பும் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, தன் டூ - வீலரில் கடமலைக்குண்டில் இருந்து கொம்புக்காரன்புலியூர் சென்று கொண்டிருந்தார்.
தேவராஜ் நகர் அருகே சென்றபோது, எதிர் திசையில் பாலுாத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் பிரதீபன், 16, என்ற சிறுவன் ஓட்டி வந்த டூ - வீலர், இவரது வாகனம் மீது மோதியது. இதில், டூ - வீலர் ஓட்டி வந்த பிரதீபன், வேல்முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.
பிரதீபன், கடமலைக்குண்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சிறுவன் பிரதீபன் ஓட்டி வந்த வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நண்பர் மாலியன் பலத்த காயங்களுடன், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கடமலைக்குண்டு எஸ்.ஐ., முஜிபுர் ரஹ்மான் விசாரிக்கிறார்.