உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 14, 2026 07:13 PM
ADDED : அக் 14, 2026 05:16 PM

அ நிறம் | அளவு
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வயலில் வேலை செய்த இரு பெண்கள் மின்னல் தாக்கி இறந்தனர்.
இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி சவுரியம்மாள் 47, அழகன் மனைவி பெரியகருப்பி 65, இருவரும் நேற்று மதியம் 2:00 மணிக்கு திருவள்ளூர் ரைஸ் மில் அருகே உள்ள வயலில் வேலை பார்த்தனர். அப்போது மழை பெய்ததால் இருவரும் மரத்திற்கு கீழ் நின்றனர்.
அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
