ADDED : அக் 27, 2024 01:35 PM

சென்னை: 'நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, தேனாம்பேட்டையில் நடந்த பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பேச்சுப்போட்டி மூலம் திமுகவுக்கு 182 பேச்சாளர்கள் கிடைத்துள்ளனர். பேசி பேசி ஆட்சியை பிடித்த இயக்கம் தி.மு.க., நாங்கள் பேசியது அலங்கார வார்த்தைகள் அல்ல. உலக புரட்சி, நாட்டின் கொடுமைகள் , பிற்போக்குத்தனம் போன்றவற்றை குறித்து பேசினோம். உதயநிதி தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலத்தை மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டியவர் உதயநிதி.
சென்டம்
பேச்சுப்போட்டி நடத்தும் பொறுப்பை இளைஞர் அணியிடம் ஒப்படைத்தேன். இளைஞரணி செயலாளர் என்பது பதவி கிடையாது. அது மிகப்பெரிய பொறுப்பு.அந்த பொறுப்பை உணர்ந்து உதயநிதி செயல்பட்டு வருகிறார். இளைஞரணி பொறுப்பை உதயநிதிக்கு கொடுத்தேன். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உதயநிதிக்கு நான் கொடுக்கும் பொறுப்புகளை, பயிற்சியாகப் பார்க்கிறேன். அப்படி பார்த்தால் நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்டிலும் அவர் சென்டம் ஸ்கோர் பண்ணுகிறார்.
பேசி பேசி...!
தமிழகம் மேன்மை அடையும். திராவிட இயக்கம் வளரும். தி.மு.க.,வால் தமிழகம் வளரும். இது தான் நம்முடைய லட்சியம். அந்த லட்சிய பாதையில் இளைஞரணி வேகமாக செல்கிறது. இதற்கு உதயநிதிவுக்கு, அவருடன் துணை நிற்கும் அனைவரும் மனதார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மேடையில் பேசி பேசி வளர்ந்தவன் நான். இன்று உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கிறேன். அன்றைக்கு பேசியது இன்றும் எனது மனதில் இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.