உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 23, 2026 11:27 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக வனத்துறையின் புதிய தலைவராக, உதயன், 58, நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக வனத்துறையின் தலைவராக, தற்போது ஸ்ரீநிவாஸ் ஆர் ரெட்டி இருந்து வருகிறார். வயது மூப்பு காரணமாக, இவர் ஜூலை 31ல் ஓய்வு பெற உள்ளார்.
இதையடுத்து, வனத்துறையின் புதிய தலைவராக உதயனை நியமித்து, வனத்துறை செயலர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த, 1991ம் ஆண்டு பிரிவு இந்திய வனப்பணி அலுவலரான உதயன், தற்போது, வண்டலுாரில் உயர் நிலை வன உயிரின ஆராய்ச்சி மைய இயக்குநராக இருந்து வருகிறார்.
