ADDED : டிச 09, 2024 04:37 PM

சென்னை: துணை முதல்வர் உதயநிதிக்கு சட்டசபையில் முதல் வரிசையில் 3வது இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி பின்னர் அமைச்சரானார். பின்னர் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சட்டசபையில் உதயநிதிக்கு 3வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அமைச்சரான பிறகு, முதல் வரிசையில் இருக்கை தரப்பட்டது.
இந் நிலையில் தற்போது துணை முதல்வராக அவர் இருப்பதால், சட்டசபையில் முதல் வரிசையில், 3வது இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக சட்டசபையில் இன்று உதயநிதி அமர்ந்திருந்தார். துணை முதல்வரான பின்னர், நடைபெறும் முதல் சட்டசபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.