ADDED : ஜூலை 27, 2011 10:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் நடக்கிறது.
நேற்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான சீனியர் வக்கீல் பி.பி. ராவ், சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் அமல்படுத்துவது சாத்தியமில்லாதது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அரசு தரப்பு வக்கீல் வாதம் முடிந்த பின், பெற்றோர் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்படவுள்ளன.