sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

/

மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

18


ADDED : மே 04, 2025 10:32 PM

Google News

ADDED : மே 04, 2025 10:32 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் சக்கரத்தின் அலாய் டிஸ்க் கழன்று விழுந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசின் மீது பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

மக்கள் நலப் பணிகளில் தொடரும் தமிழக அரசின் மெத்தனப் போக்கும்,

அலட்சியமும் கவனக்குறைவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரத் துறை

அமைச்சரும் பா.ஜ., தேசியத் தலைவருமான நட்டா நிகழ்ச்சியை முடித்துவிட்டு டில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் விரைந்த போது, வண்டலூர்-மீஞ்சர் சாலை அருகே அவர் பயணித்த கார் பழுதடைந்து சிறு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

முக்கியத்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு மாநிலத்திற்கு வருகை தரும்

போதெல்லாம் அந்தந்த மாநில அரசுகள் தான் அவர்களுக்கு தங்குமிடம்,

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு, அளிக்க வேண்டிய கடமை உடையது. ஆனால்

விருந்தினர்களைப் போற்றும் தமிழர் மரபு, திமுக மாடலில் இல்லை போலும்.

நட்டா மே 4 அன்றுமாலை தமிழகத்திற்கு வருகை தந்திருந்த போது, வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு சென்று திரும்பினார்.

அப்போது வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திருமுடிவாக்கம் அருகே கார்சென்றபோது நட்டா பயணம் செய்த காரில் இருந்த அலாய்

சக்கரத்திலிருந்து அலாய் டிஸ்க் கழன்று விழுந்து வாகனங்கள் மீது மோதி

விபத்து ஏற்பட்டது. ஓட்டுனரின் திறமையால் மத்திய அமைச்சரும் நானும் உயிர்

தப்பினோம்.

கோடிகளை இறைத்து நிரப்பிய செக்யூரிட்டி உபகரணங்களுடன், பளபளக்கும்பாதுகாப்பு வாகனத்தில் பயணிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு வருகை தரும் மத்தியஅமைச்சர்கள், மற்ற கட்சித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், ப்ரோட்டோகால் வாகனங்களையும் வழங்க வேண்டியது திமுக அரசின் தலையாய கடமை என்பது தெரியாதா? அல்லது தனது குடும்ப வாரிசுகளைத் தவிர வேறு எவருடைய பாதுகாப்பையும் முதல்வர் முக்கியமெனக் கருதவில்லையா?

எதிலும் எல்லாவற்றிலும் நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசின்

பஸ்கள் ஓடும் போதே வண்டிகளின் பாகங்கள் கழன்று விழும் நிலை இருக்கிறது என்பது மக்கள் அறிவார்கள். அதிர்ஷ்டவசமாக அவ்விபத்தில் மத்திய அமைச்சர் அவர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதும், பாதுகாப்பிற்காக பின்னால் தொடர்ந்த மற்றொரு மாற்று காரில் அவர் பத்திரமாக விமான நிலையம் சென்று டில்லி புறப்பட்டு விட்டார் என்பதும் ஆறுதல் அளிக்கிறது.

ஆனால் இம்முறை நட்டாவுக்குவழங்கப்பட்டிருந்த வாகனம், மிகப்பெரும் பழமையானதும் பயன்படாததும்,பாதுகாப்பற்றதாகவும் இருந்தது ஆளும் தமிழக அரசுக்கு தெரிந்து நடக்கிறதா? அல்லது மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பில் குறைபாடுகள் அனுமதிக்கப்படுகிறதா? அல்லது தமிழக அரசின் மெத்தனப்போக்கா? அல்லது அலட்சியமா? அல்லதுகவனக்குறைவா? என்ற கேள்விகள் எழுகிறது.

ஆகவே மத்திய அமைச்சர்களுக்கும் முக்கிய தலைவர்களுக்கும் பாதுகாப்பினைஉறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு வாகனங்களின் மற்றும் பாதுகாவலர்களின்

தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

ஓட்டுனரின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்ட விபத்தின் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்று இனியும் எந்தவிதமான தவறுகள் நடைபெற வண்ணம் காண நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பா.ஜ., சார்பில் வலியுறுத்துகிறோம்.

திமுக அரசு வழங்கிய பழுதடைந்த ப்ரோட்டோகால் வாகனத்தால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பாதுகாப்பிற்கு ஏதேனும் பங்கம்

விளைந்திருந்தால் தமிழக வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாக அது

பதிந்திருக்கும். திமுக அரசின் இந்த பொறுப்பற்ற செயலால்

தமிழகத்தின் மீதும் களங்கம் ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு முதல்வர் ஸ்டாலின்

பொறுப்பேற்று மக்களுக்கு தகுந்த விளக்கமளிக்க வேண்டுமென

வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us