மத்திய அரசு திட்டங்களால் 13.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்பு: மத்திய இணை அமைச்சர்
மத்திய அரசு திட்டங்களால் 13.5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்பு: மத்திய இணை அமைச்சர்
ADDED : ஜன 09, 2024 02:51 AM

ராமநாதபுரம் ;மத்திய அரசின் சிறந்த திட்டங்களால் நாட்டில் 13.5 கோடி பேர் வறுமைகோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் அருகே இளமனுாரில் மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இளமனுார் ஊராட்சியில் நடந்தது. மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டில் 32.59 சதவீதமாக இருந்த வறுமை 19.28 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1424 லட்சம் டன் உணவுப் பொருட்கள் பொது விநியோகத் திட்டத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
325 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கைக்காக ரூ.630 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1.38 கோடி பேருக்கு நிதியுதவியுடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

