காங்கிரசின் பேனரில் மத்திய அமைச்சர் படம்: ராகுல் பிரசார கூட்டத்தில் கூத்து
காங்கிரசின் பேனரில் மத்திய அமைச்சர் படம்: ராகுல் பிரசார கூட்டத்தில் கூத்து
UPDATED : ஏப் 08, 2024 12:41 PM
ADDED : ஏப் 08, 2024 12:40 PM

மாண்ட்லா: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி எம்.பி., ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் காங்கிரஸ் வேட்பாளர், தலைவர்கள், நிர்வாகிகள் புகைப்படங்களுடன், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் படமும் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 6 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் ஏப்.,19ல் நடைபெறுகிறது. இதில் மாண்ட்லா தொகுதியில் மத்திய அமைச்சரும் ஆறு முறை பா.ஜ., எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பக்கன் சிங் குலாஸ்தே மற்றும் முன்னாள் அமைச்சரும் நான்கு முறை காங்கிரஸ் எம்எல்ஏ.,வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஓம்கார் சிக் மார்க்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதில், பக்கன் சிங் குலாஸ்தே ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் மோதுவதால் போட்டி கடுமையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கார் சிக் மார்க்கமை ஆதரித்து ராகுல் அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.


