ஒற்றை கருத்தில் ஒன்றுபட்டு நிற்கும் தி.மு.க., கூட்டணி
ஒற்றை கருத்தில் ஒன்றுபட்டு நிற்கும் தி.மு.க., கூட்டணி
ADDED : பிப் 20, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகளை, தினந்தோறும் முதல்வர் ஸ்டாலின் படிக்க வேண்டும். 2026 ஆண்டில் நிச்சயமாக தி.மு.க., அரசு இருக்காது. இந்த அரசு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். தி.மு.க., கூட்டணியில் அங்க வகிக்கும் கட்சிகளே, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., கூட்டணியில் தீர்க்க முடியாத அளவுக்கு பிரச்னைகள் இருக்கிறது. ஆனால், பா.ஜ., வந்துவிடக் கூடாது என்ற ஒற்றை கருத்தில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டு உள்ளனர்.
அண்ணா சாலை பக்கம் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் எட்டு கோடி மக்களில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.
பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

