ADDED : பிப் 08, 2025 07:01 PM

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. அதிர்ச்சியாக உள்ளன. இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளே அங்கு பிரிந்து நின்று, தேர்தலை சந்தித்ததால் தான், ஆம் ஆத்மிக்கும், காங்கிரசுக்கும் தோல்வி கிடைத்திருக்கிறது. ஆக, இண்டியா கூட்டணியில் இருப்போருக்கு ஒற்றுமை மிக அவசியம். கூட்டணியில் எந்த கட்சியும் அடுத்த கட்சிக்கு சளைத்தது அல்ல; அதனால், எல்லா கட்சியினரும் ஒன்றாக இணைந்துதான், தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும்.
டில்லி தேர்தல் தோல்விக்குப் பிறகாவது, ஒற்றுமையின் வலிமையை புரிந்து கொண்டு, கூட்டணிக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இண்டியா கூட்டணியில், மாற்று கட்சியினர் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், பல விஷயங்களிலும் கருத்தொற்றுமையுடன் உள்ளனர். அதனால் தான் இங்கு வெற்றி கிடைக்கிறது. மற்ற மாநிலங்களிலும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சண்முகம், மாநில செயலர், மார்க்ஸிஸ்ட் கம்யூ.,