தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உபயோகம் இல்லாத சட்டசபை: பிரேமலதா

 உபயோகம் இல்லாத சட்டசபை: பிரேமலதா

 உபயோகம் இல்லாத சட்டசபை: பிரேமலதா


ADDED : செப் 09, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''சட்டசபையில் மக்களுக்கு வேண்டிய விஷயங்கள் குறித்து பேசபடவில்லை,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேம லதா தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கு தான் சட்டசபை உள்ளது. ஆனால், தற்போது வெறும் விவாதங்களும், சண்டைகளும் தான் நடக்கின்றன. இதனால் நேரம் வீணாகிறது.

தி.மு.க., - எம்.எல்.ஏ..,கள் வெளியேற்றப்பட்டனர். கூட்டணியில் நானும் இருப்பதால், என்னுடைய கருத்துகளை கூற வேண்டும் என, சபாநாயகரிடம் அனுமதி கேட்டேன்.

ஆனால், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, நானும் வெளிநடப்பு செய்தேன். சட்டசபையில், 'மிசா' மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து, முதல்வர் பேசியது பழைய வரலாறு.

மக்களுக்கு வேண்டிய விஷயங்கள் குறித்து பேசப்படவில்லை. மக்களுக்கு உபயோகம் இல்லாத ஒரு சட்டசபையாக தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us