உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
சென்னை: தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஐ., கடந்த 10 மாதங்களில், 5 வயது மற்றும் 15 வயதை எட்டிய குழந்தைகளின் கைரேகை, விழித்திரை, புகைப்படம் ஆகிய, ‘பயோமெட்ரிக்’ விபரங்களை இலவசமாக பதிவு செய்தது.
இதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், 22.64 கோடி பேரின் ஆதார் விபரங்களை புதுப்பித்து, உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்தது. அடுத்து மஹாராஷ்டிராவில், 12.12 கோடி; பீஹாரில் 11.67 கோடி பேரின் ஆதார் பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்பட்டு, அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. தமிழகம், 7.56 கோடி பேரின் ஆதார் பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பித்து, 6ம் இடத்தை பிடித்துள்ளது.
