ADDED : அக் 31, 2025 01:10 AM
பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக பிரத்யேக கணக்கீடு விண்ணப்பம் வழங்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்காதவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இது தான் தற்போதைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் உள்ள பிரச்னை. அங்கு, 62 லட்சம் வாக்காளர்களை நீக்கினர். அதில், 4 லட்சம் பேர் முஸ்லிம்கள்; 30 லட்சம் பேர் பெண்கள்.
ஏழை, தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ஓட்டு இல்லாமல் செய்கின்றனர்.
தமிழகத்தில் சிறப்பு திருத்தப் பணிக்கு இது நேரமல்ல; இதனால், 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஓட்டுகள் இல்லாமல் போகும். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தோருக்கு கூட, ஓட்டு இல்லாமல் போனது போல தற்போதும் நடக்கும்.
- மாணிக்கம் தாகூர்
காங்., --- எம்.பி.,

