தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பொதுத்தேர்வு மாணவர் பதிவேற்ற அவகாசம்

பொதுத்தேர்வு மாணவர் பதிவேற்ற அவகாசம்

பொதுத்தேர்வு மாணவர் பதிவேற்ற அவகாசம்


UPDATED : அக் 30, 2026 06:17 PM

ADDED : அக் 30, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 06:17 PM ADDED : அக் 30, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்ற நவ., 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2026 – 27-ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிக்கும் பணி ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. இதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர் விவரங்களை அக்., 14 முதல், 31-ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 மாணவர் விவரங்களை அக்., 22 முதல், 31-ம் தேதிக்குள்ளும் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் (எமிஸ்) பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையாததால், பதிவேற்றத்துக்கான கால அவகாசத்தை நவ., 14-ம் தேதி வரை நீட்டித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us