ADDED : செப் 24, 2026 02:06 AM
பெரம்பூர்:
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து,
அவரது ஆதரவாளர்களும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.
வடசென்னை
மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் டில்லிபாபு, 50, தன்
பதவியை, நேற்று ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா
செய்வதாக, அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது
ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர், பெரம்பூர், வடசென்னை காங்கிரஸ் அலுவலகம்
அருகே நேற்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
டில்லிபாபு ஆதரவாளர்கள் கூறியதாவது:
மாவட்டத் தலைவர் டில்லிபாபுவின் ராஜினாமாவை கட்சி மேலிடம் மறுபரிசீலனை
செய்து, அவர் தொடர்ந்து பதவியில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவருக்கு ஆதரவாக பெரம்பூர், திரு.வி.க., நகர், கொளத்துார் தொகுதி வட்டத்
தலைவர்கள் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளனர்.
மாவட்டத் தலைவர்
தொடர்ந்து பதவியில் செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்களின் கருத்துகளையும் கட்சி மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
