தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அமெரிக்கா: ஈரான் அகதிகளை ஏற்க பாக்., மறுப்பு: பாதியில் திரும்பியது விமானம்

அமெரிக்கா: ஈரான் அகதிகளை ஏற்க பாக்., மறுப்பு: பாதியில் திரும்பியது விமானம்

அமெரிக்கா: ஈரான் அகதிகளை ஏற்க பாக்., மறுப்பு: பாதியில் திரும்பியது விமானம்


UPDATED : நவ 11, 2026 08:51 PM

ADDED : நவ 11, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 08:51 PM ADDED : நவ 11, 2026 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவில், ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுடன் துாதரக உறவு இல்லாத ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் வழியாக நாடு கடத்தப்படுகின்றனர்.

இதற்காக, அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் மேசா நகரத்திலிருந்து ஒன்பது ஈரானியர்களுடன் ஒரு சிறப்பு விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பாகிஸ்தான் சென்று, அங்கிருந்து அவர்கள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்தனர். ஆனால், விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில், அகதிகளை ஏற்க பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து தரை இறங்கியது. அகதிகள் மீண்டும் அரிசோனாவில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டனர்.

ஈரான் அகதிகளை நாடு கடத்தும் முயற்சி ரத்து செய்யப்படுவது சமீப நாட்களில் இது இரண்டாவது முறை. கடந்த 8ம் தேதி எட்டு ஈரான் அகதிகளுடன் புறப்பட்ட மற்றொரு விமானத்தின் பயணமும் எந்த விளக்கமும் இன்றி ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2026. ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா இதுபோன்ற மூன்று விமானப் பயணங்கள் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஈரானியர்களை நாடுகடத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us