ADDED : பிப் 10, 2026 06:39 AM

சென்னை: 'யு.டி.எஸ்., செயலி, மார்ச் 1ம் தேதி முதல் செயல்பாடது. அதற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த செயலியாக, 'ரயில் ஒன்' செயலி செயல்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
ரயில்வே சேவைகளை பெற, பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் முக்கியமானது யு.டி.எஸ்., செயலி. இந்நிலையில், யு.டி.எஸ்., செயலி வரும் மார்ச் 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக, 'ரயில் ஒன்' செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யு.டி.எஸ்., செயலி நிறுத்தப்படுவதால், அதில் உள்ள 'ஆர்.-வாலட்' இருப்பு காலாவதியாகாது. இந்த இருப்பு தொகையை 'ரயில் ஒன்' செயலியில் பயன்படுத்த முடியும். டிக்கெட் பதிவு மற்றும் பயணியர் சேவைகளுக்காக அதிகாரப்பூர்வ மொபைல் தளமாக இருக்கும், 'ரயில் ஒன்' செயலியை, பயணியர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

