வி ஸ்கொயர் மால் ஆண்டு விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
வி ஸ்கொயர் மால் ஆண்டு விழா முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
ADDED : நவ 02, 2024 05:44 AM

கடலுார்,: கடலுார் வி ஸ்கொயர் மால் 2ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.
கடலுாரில், முதல் முறையாக மிக பிரமாண்டமான அமைந்துள்ள வி ஸ்கொயர் மால், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், புட்கோட், 3 சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் செய்வதற்கான முன்னணி வர்த்தக நிறுவனங்களுடன் இயங்கி வருகிறது.
வி ஸ்கொயர் மாலின் 2ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ், வள்ளி விலாஸ் ரமேஷ், நிர்வாக இயக்குனர்கள் சரவணன், சொர்ணமால்யா, லஷ்ணமால்யா வரவேற்றனர். பாடலி சங்கர், உமா சங்கர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் பங்கேற்றார்.
மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, வக்கீல்கள் துரைபிரேம்குமார், அமுதவள்ளி, ரங்கநாதன் குத்து விளக்கேற்றினர்.
முன்னதாக, வி ஸ்கொயர் மால் செல்பி பாயிண்ட், கல்வெட்டு ஆகியவற்றை மேயர் சுந்தரி ராஜா திறந்து வைத்தார்.
விழாவில், டி.எஸ்.பி., ரூபன்குமார், பானுமதி மோகன், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி, என்.எஸ்.எஸ்., முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுகம், என்.எஸ்.எஸ்., சுரேஷ், துாய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, இன்ஸ்பெக்டர் சந்திரன், வக்கீல் பாலசங்கர், பாலாஜி பாஸ்கர், ஜி.டி.எஸ். சரவணன், சவுதா சரவணன், பி.எஸ்.எம். குரூப்ஸ் ஜெகநாதன், ராணி ஜெகநாதன், பூபதி ஸ்டோர் சக்கரவர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் சுபாஷினி ராஜா, சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், கவியரசன், பிரசன்னா மற்றும் நண்பர் கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பொதுநல அமைப்பினர்உட்பட பலர் பங்கேற்றனர்.