ADDED : ஆக 22, 2026 11:00 PM
தி.மு.க., மாவட்ட செயலர் பதவிகளுக்கு அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், 13 மாவட்ட செயலர்கள் பதவியிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வில் தற்போது 77 மாவட்ட செயலர்கள் உள்ளனர். அவர்களில், திருநெல்வேலி மேற்கு - ஆவுடையப்பன், 81; ராணிப்பேட்டை - ஆர்.காந்தி, 80; ஈரோடு தெற்கு - முத்துசாமி, 77; தேனி தெற்கு - ராமகிருஷ்ணன், 77; விருதுநகர் -- சாத்துார் ராமச்சந்திரன், 77; புதுக்கோட்டை தெற்கு - ரகுபதி, 76; திருவண்ணாமலை தெற்கு - எ.வ.வேலு, 75; சேலம் கிழக்கு - சிவலிங்கம், 75; துாத்துக்குடி தெற்கு - அனிதா ராதாகிருஷ்ணன், 74; காஞ்சிபுரம் தெற்கு - சுந்தர், 72; தஞ்சாவூர் வடக்கு - சாக்கோட்டை அன்பழகன், 72; விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான், 71; மதுரை மாநகர் - தளபதி, 70 ஆகிய, 13 பேர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
தலைவர் பதவிக்கு வயது வரம்பு இல்லையா?
தி.மு.க.,வில் கிளை, வட்ட, பகுதி, நகர, பேரூராட்சி, ஒன்றிய, மாவட்ட செயலர்களுக்கு, 45 முதல் 70 வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், துணை பொதுச்செயலர், முதன்மை செயலர், அமைப்பு செயலர் போன்ற முக்கிய பொறுப்பு களுக்கு, வயது வரம்பு நிர்ணயிக்கப் படவில்லை.
இதனால், 70 வயதை கடந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அப்பொறுப்புகளில் தொடர்வர்.
