ADDED : அக் 05, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 81, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடந்த, சுயமரியாதை இயக்க நுாற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, வைகோ திட்டமிட்டு இருந்தார்.
சளி, இருமலால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று மாலையில், சென்னை ஆயிரம் விளக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 'சிகிச்சை முடிந்து, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.