தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ த.வெ.க.,விற்கு முட்டு கொடுக்கவே தவறான உதாரணம் கூறும் வைகோ: தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சாடல்

 த.வெ.க.,விற்கு முட்டு கொடுக்கவே தவறான உதாரணம் கூறும் வைகோ: தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சாடல்

 த.வெ.க.,விற்கு முட்டு கொடுக்கவே தவறான உதாரணம் கூறும் வைகோ: தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சாடல்


ADDED : ஜூலை 08, 2026 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்பம்: ''தமிழக வெற்றிக்கழகம் மீதான குதிரை பேர குற்றச்சாட்டை மறைக்கவும், அக்கட்சிக்கு முட்டு கொடுக்கவும் தவறான உதாரணத்தை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறி வருகிறார்,'' என, தி.மு.க.,வைச் சேர்ந்த கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ சில நாட்களுக்கு முன் பேசும்போது, ''2009 ல் கம்பம் தொகுதியில் ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனை குதிரை பேரம் மூலம் தி.மு.க.,வில் இணைத்தனர்,'' என குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கம்பம் தொகுதி முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் கூறியதாவது:

2006 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக 3 ஆண்டுகள் இருந்தேன். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எனக்கு கொடுத்த நெருக்கடியால் தி.மு.க.,வில் இணைந்தேன்.

தேர்தல் முடிந்து 20 நாட்களில் கட்சி மாறவில்லை. மூன்றாண்டுகள் ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக பணிபுரிந்த பிறகு தான் தி.மு.க.,வில் இணைந்தேன். அன்று தி.மு.க., ஆட்சிக்கு எந்தவித நெருக்கடி, கவிழும் என்ற நிலையும் இல்லை. தன்னிச்சையாக முடிவு எடுத்து தான் நான் தி.மு.க.,வில் இணைத்தேன். இன்று த.வெ.க., மீது வைக்கப்படும் குதிரை பேர குற்றச்சாட்டை மறைக்கவும், அக்கட்சிக்கு முட்டு கொடுப்பதற்காகவும் 17 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை தவறாக வைகோ உதாரணம் காட்டுகிறார். அதன் பின் ஏன் தொடர்ந்து அவர் தி.மு.க., கூட்டணியில் பயணித்தார்.

குதிரை பேர அரசியல் தொடர்பாக என்னை உதாரணம் காட்டி பேசுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us