போதையில் பஞ்சாப்பாக மாறும்: தமிழகத்தை எச்சரிக்கும் வைகோ
போதையில் பஞ்சாப்பாக மாறும்: தமிழகத்தை எச்சரிக்கும் வைகோ
ADDED : டிச 10, 2025 07:11 AM

மதுரை: ''தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைஞர்கள், மாணவர் சமுதாயம் பாழாகி போய்விடும். தமிழகம் பஞ்சாப்பை போல மோசமான நிலைக்கு ஆகிவிடும்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைஞர், மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகி விடும். தமிழகம், பஞ்சாப்பை போல மோச மான நிலைக்கு ஆகிவிடும் என்பதால் அதை தடுக்க வலியுறுத்தி திருச்சியில் ஜன.2 ல் புறப்படும் சமத்துவ நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மதுரையில் ஜன., 12ல் பயணம் நிறைவு பெறுகிறது.
என்னுடன் 950 பேர் இந்த நடை பயணத்தில் பங்கேற்கின்றனர். இது எனது 10வது நடைபயணம். கோவையில் ஒரு இளம் பெண் நான்கு மிருகங்களால் நாசமாக்கப்பட்டார். அந்த நான்கு பேரும் போதை அருந்தி இருந்தார்கள்.
மதுவை விட கொடியது, இந்த போதை பொருள். மது அருந்தியவர்களை கண்டு பிடித்து விடலாம். போதைப் பொருள் பயன்படுத்தியவரை கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறு வைகோ கூறினார்.

