ADDED : நவ 26, 2025 02:13 AM

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக
சுப்ரீம் கோர்்ட்டில் வைகோ மனு
தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்
எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு எதிராக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக தி.மு.க., தனியாக தொடர்ந்துள்ள வழக்குடன், என் வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்' என, வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, 'இந்த எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தை பொறுத்தவரை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் என ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தனித்தனியாக தான் பார்க்கிறோம். எனவே உங்களது வழக்கை டிச., 2ம் தேதி தான் விசாரிக்க முடியும்' என, தெரிவித்தனர்.
மேலும், வைகோ தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -:

