ADDED : பிப் 14, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில் தனி இருக்கையில் அமர்ந்து, பா.ஜ., - வானதி சீனிவாசனும், அ.தி.மு.க., - தங்கமணியும், 10 நிமிடங்களுக்கு மேலாக பேசினர்.
சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. விவாதம் ஒரு பக்கம் நடந்த வேளையில், காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணியும், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும், 10 நிமிடங்களுக்கு மேலாக பேசினர்.

