பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
ADDED : அக் 30, 2025 05:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(38). அவரது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் தனது பெயரை சேர்க்க காட்டூர் விஏஓ ஜெயக்குமாரிடம்(51) விண்ணப்பம் செய்தார்.
இதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜெயக்குமார் கூறினார். அதனை கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் அறிவுரைப்படி ராமமூர்த்தி ரூ.17 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அதனை வாங்கிய ஜெயக்குமாரை அங்கு மறைந்திருந்த திருப்பூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

