ADDED : நவ 10, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பட்டாவில் பெயர் சேர்க்க, 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரடிவாவியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 38; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்திற்கான பட்டாவில், தன் சித்தப்பா செல்வராஜ் பெயரை சேர்க்க, வடுகபாளையம் புதுார் வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பித்தார். இதற்காக, வி.ஏ.ஓ., முத்துலட்சுமி, 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத அவர், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் அறிவுரை படி, ரசாயனம் தடவிய பணத்தை, கிருஷ்ணசாமி நேற்று காலை, முத்துலட்சுமி வீட்டிற்கே சென்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார், அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

