பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
ADDED : நவ 10, 2025 12:50 PM

திருப்பூர்: திருப்பூரில் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம், வீட்டில் வைத்து லஞ்சம் வாங்கிய போது விஏஓ முத்துலட்சுமி கையும் களவுமாக பிடிபட்டார்.
திருப்பூர் மாவட்டம் கரடிவாவியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் விவசாயி. பட்டாவில் பெயர் சேர்க்க பல்லடம் வடுகபாளையம் புதூர் விஏஓ முத்துலட்சுமியை,44, அணுகினார். இதற்கு ரூ.30 ஆயிரம் முத்துலட்சுமி லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், அவர் முதலில் ரூ.10 ஆயிரத்தை பணத்தை கிருஷ்ணசாமியிடம் இருந்து பெற்றுள்ளார்.
மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தை வீட்டில் வந்து கொடுக்குமாறு முத்துலட்சுமி கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர், லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல் படி, முத்துலட்சுமி வீட்டில் சென்று ரூ.20 ஆயிரத்தை கிருஷ்ணசாமி வழங்கினார்.
அப்போது மறைந்த இருந்த, லஞ்சம் ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் போலீசார் முத்துலட்சுமி ரூ.20 ஆயிரம் பணத்தை வாங்கிய போது, கையும் களவுமாக கைது செய்தனர். விஏஓ முத்துலட்சுமியிடம் விசாரணை நடந்து வருகிறது.

