நிலத்தை அளந்து தருவதற்கு ரூ.2 ஆயிரம்: லஞ்சப் பணத்துடன் சிக்கினார் வி.ஏ.ஓ.,!
நிலத்தை அளந்து தருவதற்கு ரூ.2 ஆயிரம்: லஞ்சப் பணத்துடன் சிக்கினார் வி.ஏ.ஓ.,!
ADDED : ஜன 28, 2025 08:31 PM

அரியலூர்: அரியலுார் மாவட்டத்தில், நிலத்தை அளந்து தருவதற்காக, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்குடி கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
அரியலுார் மாவட்டத்தில், வங்குடி கிராம நிர்வாக அலுவலராக புகழேந்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரிடம் அய்யப்பன் நாயக்கன்பேட்டைகிராமத்தை சேர்ந்த வேல்முருகன், தனது நிலத்தை அளவை செய்ய நாடி உள்ளார்.
அப்போது புகழேந்தி ரூ.2000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து புகழேந்தி மீது வேல்முருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புகழேந்தியிடம் வேல்முருகன் கொடுத்தார்.
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புகழேந்தியை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.