வி.சி., - மா.செ.,க்கள் பட்டியல் டிச., 6ல் வெளியீடு: திருமா
வி.சி., - மா.செ.,க்கள் பட்டியல் டிச., 6ல் வெளியீடு: திருமா
ADDED : டிச 04, 2025 05:34 AM

சென்னை: 'விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர்கள் பட்டியல், நாளை மறுநாள் வெளி யிடப்படும்' என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல், அம்பேத்கர் நினைவு நாளான டிச., 6ம் தேதி மாலை அறிவிக்கப்படும். அதில் முதற்கட்டமாக, 234 மாவட்ட செயலர்கள் மற்றும் துணை மாவட்ட செயலர், பொருளாளர், செய்தி தொடர்பாளர் என, நிர்வாக பட்டியல் வெளியிப்படும்.
ஏற்கனவே உள்ள 144 மாவட்ட செயலர்களில் சிலர் விடுவிக்கப்படலாம். இந்த பட்டியல் தயாரிப்பு பணிகளால், மூன்று நாட்களாக பார்லிமென்ட் செல்ல முடியவில்லை. இன்று பார்லிமென்ட் சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்கிறேன்; அங்கு நடக்கும் உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்கிறேன். எனவே, 6ம் தேதியன்று, அங்கிருந்து நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பித்த அனைவருக்கும் பதவிகள் வழங்கப்படும். ஒரு பதவி மறுக்கப்பட்டிருந்தாலும், மற்ற பதவிகள் வழங்கப்படும். எனவே, யாரும் வருத்தப்பட வேண்டாம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

