ADDED : பிப் 13, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி நேற்று கருப்பு பேன்ட், கருப்பு சட்டை அணிந்து, சட்டசபைக்கு வந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு உடையில் தான் வந்ததாக தெரிவித்தார். ஆனால், அவரது கட்சியின்மற்ற எம்.எல்.ஏ.,க்கள்,வழக்கமான உடை அணிந்து வந்திருந்தனர்.