ADDED : அக் 03, 2024 08:13 PM
அரசியல் நாடகத்தின் ஒட்டு மொத்த சாசனம் உளுந்துார்பேட்டையில் நடந்த வி.சி.கட்சி மாநாடு. மகாத்மா காந்தி மதுவுக்கு எதிராக போராடினார். அவரது மண்டபத்தில் மது பாட்டில்கள் இருப்பதை கவனித்த கவர்னர் சரியாக தான் பேசுகிறார். திராவிட ஆட்சியால் தலித் மக்களுக்கு பயனில்லை.
மது விலக்கிற்காக, வி.சி.,க்கள் நடத்திய மாநாட்டில், மது தொழிற்சாலைகளை நடத்தும் தி.மு.க.,வினரையும் அழைத்து, அதன் தலைவர் திருமாவளவன் நாடகம் நடத்துகிறாரா. தமிழகத்தில் வி.சி.கட்சியும், தி.மு.க.,வும் மக்களை ஏமாற்றுகின்றன. மாநாட்டில் பெண் போலீசை தாக்கியுள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. நடிகர் விஜய் நடத்தும் மாநாட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., கூட்டணி நேர்மையாக உள்ளது. 2026 ல் இதே நம்பிக்கையில் சட்டசபை தேர்தலை சந்திப்போம்.
- எச்.ராஜா,
பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர்.

