ADDED : ஆக 06, 2025 08:47 AM
சென்னை : ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்றக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் 9ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில், காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஜாதிய ஆணவ கொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
மத்திய அரசு, ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது. அதற்கு, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வருவதாக, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.
இதுகுறித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வலியுறுத்தி, வரும் 9ம் தேதி சென்னையில், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.